ADDED : ஆக 16, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, ஆக. 17–
திட்டக்குடி அடுத்த மருதத்துாரைச் சேர்ந்தவர் மணிவேல், 40; இவரது மனைவி தங்கம், 33. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். மணிவேல் கடந்த 14ம்தேதி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான மருதத்துார் வந்தார்.
நேற்று முன்தினம் 12:00 மணியளவில் மணிவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். மீண்டும் பகல் 2:00 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தங்கம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில், மாமனார், மாமியார் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக தங்கம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
