/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு அறவையை துவக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை
/
கரும்பு அறவையை துவக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை
ADDED : டிச 31, 2024 07:02 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் உடனே கரும்பு அறவையை துவக்க வேண்டுமென விவசாய சங்கங்கள் கோரியுள்ளனர்.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி கரும்பு சப்ளையர்ஸ் சங்கம், கரும்பு விவசாயிகள் நிவாரணக்குழு நிர்வாகிகள் ரவிக்குமார், சுப்ரமணியன் தலைமையில் ஆலை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதில், பெஞ்சல் புயலால் கரும்பு அதிகம் பாதித்துள்ளது.
மேலும் சுற்றியுள்ள ஆலைகள் கரும்பு அறவையை துவக்கி விட்டன.
உடனடியாக ஈ.ஐ.டி., அறவையை துவக்காவிட்டால் தொழிலாளர்கள் வேறு பகுதிக்கு சென்று விடுவார்கள். இதனால் வெட்டு கூலி அதிகரிக்கும்.
எனவே உடனே அறவையை துவக்க வேண்டும். ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள மான்யங்களுக்கு விதித்துள்ள நிபந்தனையை வன்மையாக ஆட்சேபிகிறோம். அதேபோல் அறிவித்துள்ள மான்யத்தை அறுவடைக்கு பிறகு வழங்கும் முடிவை ஏற்க முடியாது.
கடந்த ஆண்டை போல மான்யத்தை 60 நாட்களில் வழங்க வேண்டும். மற்ற ஆலைகளை போல மானியத்தை உயர்த்த வேண்டும். இயந்திரத்தால் வெட்டி அனுப்பிய கரும்புக்கு கூடுதலாக கழிவுக்கு பிடித்த தொகையை திரும்ப வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் கரும்பு நடவு குறையும் என கூறியுள்ளனர்.