/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.டி.ஓ., முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சர்வேயருடன் வாக்கு வாதம் ' தள்ளு முள்ளு' கடலுாரில் திடீர் பரபரப்பு

ADDED : ஜன 11, 2025 06:22 AM

கடலுார்: முறைகேடாக பட்டா மாற்றம் செய்த அதிகாரிகளை கண்டித்து கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த விலங்கல்பட்டு ஊராட்சி, வி.பெத்தாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்,51; இவரது சகோதரர்கள் ராமகிருஷ்ணன், சகாதேவன். மூவருக்கும் அதேகிராமத்தில் பூர்வீக சொத்தான 21 சென்ட் மனை உள்ளது. இவர்களுக்கும், பக்கத்து இடத்தை சேர்ந்தவருக்கும் மனை பிரச்னை உள்ளது.
இந்நிலையில், ஆறுமுகம் தரப்பினர் அனுபவித்து வந்த மனை, மற்றொருவருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதில் அதிருப்தி அடைந்த ஆறுமுகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் நேற்று காலை கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று, ஆர்.டி.ஓ., அபிநயாவை சந்தித்து, முறைகேடாக பட்டா வழங்கியது குறித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது ஆறுமுகம், தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனிருந்தவர்கள், அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். கடலுார் புதுநகர் போலீசார் ஆறுமுகத்திடம் விசாரித்தனர்.
அப்போது அலுவலகத்திற்கு வந்த சர்வேயர் ராஜமகேந்திரனை, பெத்தாங்குப்பம் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை நெட்டித்தள்ளினர். போலீசார் சர்வேயரை மீட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ., பட்டா தவறாக கொடுக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து தருவதாக கூறியதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.