ADDED : செப் 13, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த நளன்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி,58; விவசாயி. இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு, தாழ்வாக சென்ற மின் ஒயர் மீது எதிர்பாராத விதமாக கை பட்டதால் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
உடன், அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவுக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே, தண்டபாணி இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், குமராட்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
