ADDED : செப் 16, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மொபட் மீது பைக் மோதியதில் விவசாயி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த திருவாமூரைச் சேர்ந்தவர் முத்துசாமி,58; விவசாயி; இவர் நேற்று தனது மனைவி கோவிந்தம்மாளை தனது மொபட்டில் ஏற்றிக் கொண்டு அங்குசெட்டிப்பாளையத்தில் இருந்து சின்னசேமக்கோட்டைக்கு புறப்பட்டார். சின்னசேமக்கோட்டை மகளிர் மெஸ் அருகே சென்றபோது, எதிரே எஸ்.ஏரிப்பாளையம் காலனியை சேர்ந்த தணிகைவேல்,38; ஓட்டி வந்த பைக் மோதியது. அதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தணிகைவேல் பண்ருட்டி அரச மரத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
விபத்து குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
