UPDATED : செப் 21, 2026 09:52 PM
ADDED : செப் 21, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி:பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த திராசு கிராமம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன்,55; விவசாயி; நேற்று மாலை 4:30 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, குப்பன் வீட்டின் பின்புறம் வெளியில் இருந்த மாட்டை பிடித்து கொட்டகையில் கட்ட சென்றார்.
அப்போது மின்னல் தாக்கியதில் குப்பன் உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். மாடு தப்பி ஓடிவிட்டது.
பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
