ADDED : ஜன 08, 2026 06:04 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டார்.
கொங்கராயனுாரை சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி, 39; விவசாயி. இவர் தனது நண்பர்கள் ஜானகிராமன்,சந்தோஷ் ஆகியோருடன் கடந்த 5ம் தேதி பைக்கில் மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பி.என்.பாளையத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சுரேஷ்,47; சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழிவிடாமல் செல்வதாக கூறி தஷ்ணாமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் சுரேஷிடம் தகராறு செய்தனர்.
இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். ஆத்திரத்தில் சுரேஷ் தனது கையில் வைத்திருந்த தடியால் தஷ்ணாமூர்த்தியை தாக்கினார்.
இதில் காயமடைந்த தஷ்ணாமூர்த்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று காலை மயக்கம் வருவதாக கூறிய தஷ்ணாமூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தனர்.

