/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி
/
நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி
நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி
நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி
ADDED : அக் 15, 2025 12:45 AM
விருத்தாசலம் :நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி, விவசாயிடம் ரூ.6 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கம்மாபுரம் சினிமா கொட்டகை தெருவை சேர்ந்தவர் சேகர், 45, விவசாயி. இவரிடம் சேலம் மாவட்டம், கெங்கவள்ளி அடுத்த கனவாய்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார், 30, என்பவர் நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரூ.6 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால், இதுவரை நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சேகர் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, ரவிக்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.அப்போது, அவர் சேகரை அசிங்கமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் ரவிக்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.