/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு
நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு
நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 19, 2024 11:43 PM

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால், நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு சுற்றுப் பகுதிகளில், சுமார் 120 ஹெக்டேர் அளவிற்கு குறுவை பட்டத்திற்கு சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை, அப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தில் விற்பனைக்காக, 10 நாட்களுக்கு மேலாக குவித்து வைத்துள்ளனர். ஆனால், அங்கு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, விரைவில் நெல் அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.