/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் அதிகாரிகள் இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு

ADDED : பிப் 05, 2025 06:23 AM
திட்டக்குடி அடுத்த மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியங்களுக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி நடக்கிறது.
மங்களூர் ஒன்றியம், நல்லுார் ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணிபுரியும் வேளாண் உதவி இயக்குனர்கள் மூலம் விவசாயிகளுக்கு திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதும், மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்களை செயல்படுத்துவது வழக்கம்.
ஆனால் இரு ஒன்றியங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் உதவி இயக்குனர்கள் பணியிடம் ஓராண்டாக காலியாக உள்ளதால் இங்கு பணிபுரியும் வேளாண் அலுவலர்கள் அந்தந்த அலுவலகங்களில் கூடுதல் பொறுப்பில் பணிபுரிகின்றனர். இதனால் அவர்களின் பணிகளும் பாதிப்படைகின்றன.
உதவி இயக்குனர்கள் இல்லாததால் மத்திய, மாநில அரசின் வேளாண் துறை சார்பில் அறிவிக்கும் எந்த திட்டங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாமல் பாதிப்படைகின்றனர். எனவே, மங்களூர் மற்றும் நல்லுார் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு நிரந்தர உதவி இயக்குனர்களை நியமிக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.