/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணவாளநல்லுார் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
மணவாளநல்லுார் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மணவாளநல்லுார் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மணவாளநல்லுார் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 25, 2025 01:37 AM

விருத்தாசலம்: மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி அணை, முழு கொள்ளளவான 46 அடியில் 42 அடி நிரம்பியுள்ளது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 200 கனஅடி நீர் மணிமுக்தாற்றில் திறந்துவிடப் பட்டுள்ளது.
இதன் காரணமாக, விருத்தாசலம் அருகே மணவாளநல்லுாரில் உள்ள மணி முக்தாற்றில் ரூ.25.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது.
இதனால், அருகில் உள்ள கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கனிசமாக உயரும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.