/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மரப்பயிர்களுக்கு நிவாரணம் பெறுவது எப்படி விவரம் தெரியாமல் விவசாயிகள் தவிப்பு

ADDED : டிச 09, 2024 05:08 AM

நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சவுக்கு, தென்னை போன்ற பல ஆண்டு பயிர்களை பயிர் செய்துள்ளனர்.
அதேபோல் நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் உட்பட பல இடங்களில் நீண்ட கால பயிரான தேக்கு, மகோகனி போன்ற மரப்பயிர்களை பயிர் செய்துள்ளனர். விவசாயிகள் பயிர் செய்திருந்த சவுக்கு பயிர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் வெள்ளத்தால் பாதித்துள்ளது.
அதேபோல் வான்பாக்கம் உட்பட பல இடங்களில் பயிர் செய்து பல ஆண்டுகளான தேக்கு மரத்தில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றதால் மரம் அழுகி வீணாகியுள்ளது. பல ஆண்டு மரப்பயிர்கள் பாதிப்புக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, வனத்துறையினரிடம் தான் கேட்க வேண்டுமென வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் பாதித்த மரப்பயிர்களை இதுவரை வனத்துறை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை.நிவாரணம் பெற யாரை பார்க்க வேண்டுமென்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அதைவிட பாதிப்பில் இருந்து தப்பிய மீதி மரங்களை எப்படி காப்பாற்றுவது என்ற வழிமுறை தெரியாமல் விவசாயிகள் சிரமபடுகின்றனர். அதிகாரிகள் ஈகோ பார்க்காமல் விவசாயிகளின் சிரமத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.