/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்காலை ஆக்கிரமித்து பாதை அமைப்பு ஏரி நிரம்பாததால் விவசாயிகள் கவலை

ADDED : டிச 18, 2024 07:03 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து மண் பாதை அமைத்ததால் ஏரி நிரம்பவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விருத்தாசலம் பெரியகண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஏரி தண்ணீர் மூலம் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல் பெரியகண்டியாங்குப்பம், சின்ன கண்டியங்குப்பம், பண்டாரங்குப்பம் கிராமங்களை சேர்ந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குடிநீர் பெற்று பயனடைந்தன.
இந்நிலையில் தனியார் உர கம்பெனிகளுக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில், ஏரிக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து மண் பாதை அமைக்கப்பட்டது. இதனால் வயல்வெளிகளில் இருந்து வடிந்து வரும் மழைநீர் செல்ல முடியவில்லை.
தற்போது பெய்த மழைநீர் ஏரிக்கு வராமல் சாலையில் வடிந்து வீணாகியது. இதனால் ஏரி நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதுபோல், உர கம்பெனிகளில் பயன்படுத்தப்பட்ட மரக்கரி துகள்கள் மழைநீரில் கலந்து ஏரி நீரில் கலந்துள்ளதால் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள மண் பாதையை அகற்றி, வாய்க்காலை துார்வாரிட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.