ADDED : ஜன 24, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மகாலிங்கம், நிர்வாகிகள் செல்வராசு, டாடா, சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கரும்பு சங்க தலைவர் வரதன் வரவேற்றார். விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், கடந்தாண்டு பெய்த கனமழையில் சேதமடைந்த மக்காசோளம், பருத்தி, மரவள்ளி, உளுந்து ஆகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு 5 ஆயிரம் வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.