/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நன்றியா, எதிர்ப்பா' விவசாயிகள் குழப்பம்
/
'நன்றியா, எதிர்ப்பா' விவசாயிகள் குழப்பம்
ADDED : டிச 25, 2024 08:38 AM
தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில், காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் எதிரில். வெள்ள பாதிப்புக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, நாளை (26ம் தேதி) காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக காவிரி பாசன விவசாயிகள் சங்கம் ஆகியன சார்பில், மழையால் பாதித்த விவசாய பயிர்கள் கணக்கெடுப்பு செய்ய உத்தரவிட்ட தமிழக முதல்வர் மற்றும் வேளாண் அமைச்சருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் அறிவித்துள்ளது.
ஒரு சங்கம் அறிவித்த ஆர்ப்பாட்டமும், மற்றொரு சங்கம் அறிவித்த நன்றி அறிவிப்பு கூட்டமும், ஒரே நாளில், ஒரே இடத்தில், அதே நேரத்தில் நடத்தவும் அறிவித்துள்ளன.
விவசாயிகளின் ஆர்ப்பாட்டம், மற்றொரு பிரிவு விவசாயிகளின் நன்றி அறிவிப்பு கூட்டம் என இரண்டிற்கும் காட்டுமன்னார்கோவில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், காட்டுமன்னார்கோவிலில் ஒரே நேரத்தில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த, விவசாய சங்களின் அறிவிப்பு, காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.