ADDED : டிச 26, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மன் திவாஸ் எனும் விவசாயிகள் தின விழா நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் கலைச்செல்வி, ஜெயக்குமார் ஆகியோர் பயிர் மேலாண்மை, பூச்சி நோய் நிர்வாகம் குறித்து விளக்கம் அளித்தனர். பேராசிரியர்கள் சுகுமாறன், காயத்ரி ஆகியோர் மண்வள மேம்பாடு குறித்தும், பேராசிரியர் கண்ணன் எண்ணெய்வித்துப் பயிரில் மதிப்புக் கூட்டுதல் குறித்தும் பேசினர்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் பயிரில் மகசூல் கூட்டுவது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகள் தின விழா குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

