ADDED : டிச 15, 2025 06:47 AM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: வேளங்கிப்பட்டு மேல வாய்க்கால் கரையில், சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள், மேலவாய்க்கால் மூலம் பாசனம் பெற்று, ஆண்டுதோறும் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலவாய்க்காலின் இரு கரைகளிலும், சாலை வசதி இல்லை. இதனால் விவசாயம் செய்யும் நாட்களில் விதை, உரம், டிராக்டர் உள்ளிட்ட இடுபொருட்களை எடுத்துச் செல்ல, பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மே லும் அறுவடை காலங்களில், வாய்க்கால் கரையில் சாலை இல்லாததால், அறுவடை இயந்திரம் எடுத்துச் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, சாலை அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
