/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு செய்ய இ-சேவை மையங்களில் குவிந்த விவசாயிகள்
/
பயிர் காப்பீடு செய்ய இ-சேவை மையங்களில் குவிந்த விவசாயிகள்
பயிர் காப்பீடு செய்ய இ-சேவை மையங்களில் குவிந்த விவசாயிகள்
பயிர் காப்பீடு செய்ய இ-சேவை மையங்களில் குவிந்த விவசாயிகள்
ADDED : நவ 15, 2024 11:26 PM
புதுச்சத்திரம்: சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளான நேற்று இ-சேவை மையங்களில் குவிந்தனர்.
பரங்கிப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். அரசு சார்பில் வரும் 15ம் தேதிக்குள், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, இ-சேவை மையங்களில் ஏக்கருக்கு ரூ. 550 செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என, வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு ஆர்வம் இல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் கடைசி நாளான நேற்று பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் சிட்டா அடங்கல் பெற்று பயிர் காப்பீடு செய்ய இ சேவை மையங்களில் குவிந்தனர்.
இதனால் இ-சேவை மையங்கள் நேற்று கூட்டம் அலைமோதியது.