/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளை நிலங்களில் வடியாத வெள்ள நீர் பயிர் சேதத்தால் விவசாயிகள் விரக்தி

ADDED : டிச 18, 2024 07:10 AM

புவனகிரி: புவனகிரி வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விளை நிலங்களில் புகுந்த தண்ணீர் வடியாததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
புயல் காரணமாக வீராண ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெள்ளார் உள்ளிட்ட பல்வேறு வழியாக திறந்து விடப்பட்டது.
வெள்ளாற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் ஆற்றங்கையோரம் உள்ள மஞ்சக்கொல்லை, வத்ராயன் தெத்து, வண்டுராயன்பட்டு, அழிச்சிக்குடி உள்ளிட்ட சுற்றுபகுதி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பா நடவுப்பயிர் மற்றும் நேரடி விதைப்பு வயலில் மூழங்கியுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக தண்ணீர் வடியாமல் விவசாயிகள் கடும் மன உளச்சல் அடைந்துள்ளனர். மேலும், வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிப்பு குறித்து முறைப்படி கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.