/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது
/
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது
ADDED : ஜன 29, 2025 07:35 AM
கடலுார் : ஜனவரி மாதம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 31ம் தேதி கடலுாரில் நடக்கிறது.
கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் புதிய கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கில் நடக்கிறது. கலெக்டர் தலைமை தாங்கி விவசாயிகளின் குறைகளை கேட்கிறார். கடலுார் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8.00 மணிமுதல் 10.00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாய்ப்பினை கடலுார் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.