/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
விருதையில் உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2025 03:30 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், உட்கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது பின்வருமாறு:
சக்திவேல்: கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாடுகளின் இறைச்சியை பொது வெளியில் வெட்டி விற்பனை செய்கின்றனர். அத்துடன் மான் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
70 லட்சம் ரூபாயில் கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்து, சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, கருவேல மரங்களை பகுதி பகுதியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்: வாரிசு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் குளறுபடிகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.