/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 20ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு
/
கடலுாரில் 20ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு
ADDED : டிச 18, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
இதில், கடலுார் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.