ADDED : மார் 10, 2024 04:38 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம், : விருத்தாசலம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வமணி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் செல்வமணி, ஜார்ஜ் பெர்ணாண்டோ, கால்நடை மருத்துவர் நந்தகுமார், வனவர் சிவக்குமார், துணை பி.டி.ஓ., முருகவேல், மார்க்கெட் கமிட்டிகளின் கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, பிரபாகரன் உட்பட வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறி யியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளின் குறைகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். பின்னர் அவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. விவசாய விளைபொருட்கள் உற்பத்தி, உழவர் சந்தை செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
