/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 28, 2025 04:59 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. (1,465 மில்லியன் கன அடி). ஏரியின் மூலமாக 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்தது.
பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, குறைந்தளவு நீரே பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கீழணையில் இருந்து வடவாறு வழியாக திறக்கப்படும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கீழணைக்கு நேற்று 1,002 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையின் நீர் மட்டம் 8.3 அடியாக உள்ளது. வடவாறு வழியாக 523 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், டெல்டா பாசனத்திற்கு வடக்கு ராஜன் வாய்க்காலில் 205 கன அடி தண்ணீர், தெற்கு ராஜன் வாய்க்காலில் 207 கன அடி தண்ணீர், குமுக்கி மண்ணி ஆறு உள்ளிட்ட சிறு பாசன வாயக்ககால் மூலமாக 67 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வீராணம் ஏரிக்கு வடவாறு மூலமாக 636 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக 74 கன அடி தண்ணீரும், டெல்டா பாசனத்திற்காக 140 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முடிந்து வீராணம் ஏரி நிரம்பியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

