/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எள் அறுவடை பணி விவசாயிகள் தீவிரம்
/
எள் அறுவடை பணி விவசாயிகள் தீவிரம்
ADDED : மே 07, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிராமாக ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், பெரியவடவாடி, கர்னத்தம், எடைச்சித்துார், கோ.பூவனுார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் மாசி பட்டத்தில் போர்வெல், கிணறு பாசனம் மூலம், எள் சாகுபடி செய்வது வழக்கம்.
அதேப் போன்று, நடப்பாண்டு மாசி பட்டத்தில் எள் விதைப்பு செய்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது எள் செடிகள் நன்கு வளர்ந்துள்ளதால், அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

