/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலணி தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நடைப்பயணம்
/
காலணி தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நடைப்பயணம்
காலணி தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நடைப்பயணம்
காலணி தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நடைப்பயணம்
ADDED : செப் 25, 2025 11:53 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே காலணி தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு நடைப்பயணம் மேற்கொண்டனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 164 ஏக்கர் இடம் உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முந்திரி, வாழை பயிர் சாகுபடி செய்கின்றனர். சிலர் வீடுகள் கட்டியும் வசித்து வருகின்றனர்.
இங்கு காலணி தொழிற்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த இடத்தை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கிராம மக்கள் இடத்தை காலி செய்ய மறுத்து போராட்டங்கள் நடத்தினர். மேலும், கிராம மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என தடை உத்தரவு பெற்றனர்.
இந்நிலையில் காலணி தொழிற்சாலை அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். எனவே, காலணி தொழிற்சாலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்றிய செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமையில் நேற்று மக்கள் சந்திப்பு நடைப்பயணம் மேற்கொண்டனர்.
இப்பயணம் வெள்ளக்கரையில் துவங்கி நடுவீரப்பட்டில் முடிந்தது. மாநிலத் தலைவர் ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.