/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழை நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
மழை நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 25, 2025 02:39 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் குமராட்சி ஒன்றியம் வையூர், காட்டுக்கூடலூர், அகநல்லூர், வல்லம்படுகை, வடக்கு மாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் பாண்டியன், பாக்யராஜ், சோமசுந்தரம், துரை, வசந்தன், செல்வகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், சுற்று வட்டார விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு சரியான முறையில் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்தும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண கணக்கெடுப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

