/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரத்து வாய்க்காலில் ஆகாயத்தாமரை தண்ணீர் தேக்கத்தால் விவசாயிகள் அவதி

ADDED : நவ 30, 2024 04:43 AM

புவனகிரி : புவனகிரி அடுத்த சித்தேரியில் இருந்து வயலாமூர் வரை பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றிட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புவனகிரி அருகே முரட்டு வாய்க்கால் வழியாக வயலாமூர் வரை உள்ள சுற்றுபகுதி கிராமங்களில் நடப்பு ஆண்டிற்கு சம்பா நேரடி விதை நேர்த்தியும் சில இடங்களில் நடவுப்பணிகளும் மேற்கொண்டுள்ளனர். நீர் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமல் ஆகாயத்தாமரை அடைத்துக்கொண்டுள்ளது. இதனால் ஆண்டு தோறும் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமலும், மழை காலங்களில் வடிய வைக்க முடியாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
தற்போது சித்தேரியில் இருந்து கடைமடை வரை பாசன வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதற்கள் மண்டியுள்ளதால் தற்போது மேற்கு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மன உளச்சல் அடைந்துள்ளனர்.
எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் சார்பில் முன்னோடி விவசாயி உத்திராபதி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.