/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
/
புயல் நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜன 20, 2025 05:03 AM
நெல்லிக்குப்பம் : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பெஞ்சல் புயல் தாக்கியது.இதில் பலர் வீடுகளை இழந்தனர்.
முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் ஒரு மாதத்திலேயே வழங்கினர். புயல் தாக்கியதோடு இல்லாமல் அதேசமயம் சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் பல ஆயிரம் ஏக்கர் நெல், மணிலா, வாழை, சவுக்கு, தேக்கு மரங்கள் பாதித்தன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதித்த பயிர்களுக்கு தகுந்த மாதிரி தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது.புயலால் பாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசின் நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தியில்உள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது பல ஆயிரம் செலவு செய்து நெல் உட்பட பல பயிர்களை பயிர் செய்திருந்தோம்.புயல் மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் பாதித்தன.
இதனால் பெரியளவு நஷ்டத்தை சந்தித்துள்ளோம். அரசின் நிவாரணம் போதுமானதாக இல்லாவிட்டாலும் அதாவது கிடைக்கிறதே என நினைத்தோம்.ஆனால் இரண்டு மாதங்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை.
கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என ஒரு மாதத்துக்கு முன்பே வேளாண் அமைச்சர் கூறினார்.ஆனால் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் புதியதாக பயிர் செய்வதிலும் சிக்கல் உள்ளது.எங்களின் கஷ்டத்தை உணர்ந்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கூறினர்.