/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்கும் உத்தரவால் விவசாயிகள் அதிருப்தி
/
காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்கும் உத்தரவால் விவசாயிகள் அதிருப்தி
காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்கும் உத்தரவால் விவசாயிகள் அதிருப்தி
காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்கும் உத்தரவால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜன 17, 2025 06:13 AM
நெல்லிக்குப்பம்: காட்டு பன்றிகளை ஒழிக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணையால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் சேதபடுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அதிக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இவற்றை ஒழிக்க உத்தரவிட வேண்டுமென விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை கண்டு கொள்ளாத தமிழக அரசு காட்டு பன்றிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்த பிறகு அதை ஒழிக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் காடுகளில் இருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி இருக்கும் விவசாய நிலங்களில் சேதபடுத்தும் காட்டு பன்றிகளை சுட்டு முறையாக புதைக்க வேண்டும்.
வனவர், வி.ஏ.ஓ., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். பன்றிகள் தொல்லை இருந்தால் இந்த குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
இக்குழுவினர் ஆய்வு செய்து பரிந்துரைக்கும் போது வனச்சரக அலுவலர் பன்றிகளை சுட்டு பிடிக்க உத்தரவிடுப்படும். பின் பயிற்சி பெற்ற வனத்துறையினர் பன்றிகளை சுடுவார்கள் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது; கேரளாவில் விவசாயிகளே சுட்டு அழித்து கொள்ள அனுமதி அளித்துள்ளதால் எளிதாக பன்றிகளை கட்டுபடுத்தினர்.
தமிழக அரசின் அரசாணை படி வன துறையினரே சுட்டு பிடிக்க வேண்டுமென கூறியுள்ளனர். இந்த உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் எவ்வளவு நிலங்களுக்கு சென்று பன்றிகளை சுட முடியும். இது சாத்தியமில்லாதது. எனவே விவசாயிகளே பன்றிகளை அழிக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே பன்றிகளை ஒழிக்க முடியும் என விவசாயிகள் கூறினர்.