ADDED : செப் 19, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டத்தலைவர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், ஒன்றிய செயலாளர் உலகநாதன், வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.