/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்காச்சோள வயலில் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை
/
மக்காச்சோள வயலில் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை
மக்காச்சோள வயலில் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை
மக்காச்சோள வயலில் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 24, 2025 03:20 AM

திட்டக்குடி: திட்டக்குடி பகுதியில் சாகுபடி செய்த மக்காச்சோள வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.
மங்களூர் வட்டாரத்திற்குட்பட்ட திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய், இடைச்செருவாய், பெருமுளை, சிறுமுளை, நாவலுார், புதுகுளம், செவ்வேரி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த 2 மாதங்களுக்கு முன் மானாவாரியாக 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனர்.
இதற்காக ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமாக பெய்து வருகிறது.
இதனால் வயல்களில் இருந்து மழைநீர் வெளியேற வடிகால் வசதியின்றி மக்காச்சோள வயலில் தேங்கி நிற்கிறது.
இதனால் பயிர்கள் பாதித்து மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.