/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
/
நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
ADDED : டிச 16, 2024 07:13 AM
புதுச்சத்திரம்; கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த பூவாலை, அலமேல்மங்காபுரம், மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான், வயலாமூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் வங்கக்கடல் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்மழை பெய்து வந்தது.
அதையொட்டி பரவனாற்றின் கரையோரம் உள்ள விலை நிலங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
அதையொட்டி பூவாலை, அலமேல்மங்காபுரம், மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான், வயலாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் விலை நிலங்களில், தண்ணீர் தேங்கி பயிர்கள் முழுவதும் மூழ்கி உள்ளதால், இப்பகுதி விவசாயிகள் கவலயடைந்துள்ளனர்.