/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வைக்கோல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
/
வைக்கோல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 20, 2025 11:55 PM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் வசதி உள்ளதால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் ஆண்டு முழுவதும் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மழை பெய்ததால் அங்கு நெல் விவசாயம் பாதித்தது. இதனால் அப்பகுதி கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், அங்குள்ள வியாபாரிகள் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வைக்கோல் வாங்கி செல்கின்றனர். அறுவடை துவங்கிய சமயத்தில் ஒரு கட்டு 150 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெள்ளத்தால் நெல் பாதித்தாலும் வைக்கோலில் பணம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பினர். ஆனால,் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து 70 ரூபாய்க்கு வாங்க துவங்கியுள்ளனர். இதனால் நெல்லிக்குப்பம் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

