/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொய்யா விலை வீழ்ச்சியால் விவசாயிகள்... கவலை; நிலத்திலேயே கொட்டி அழிக்கும் பரிதாபம்
/
கொய்யா விலை வீழ்ச்சியால் விவசாயிகள்... கவலை; நிலத்திலேயே கொட்டி அழிக்கும் பரிதாபம்
கொய்யா விலை வீழ்ச்சியால் விவசாயிகள்... கவலை; நிலத்திலேயே கொட்டி அழிக்கும் பரிதாபம்
கொய்யா விலை வீழ்ச்சியால் விவசாயிகள்... கவலை; நிலத்திலேயே கொட்டி அழிக்கும் பரிதாபம்
ADDED : ஜூலை 29, 2025 07:19 AM

பண்ருட்டி, ஜூலை 29- அண்ணாகிராமம் வட்டாரத்தில் கொய்யா பழத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிரான கொய்யா பயிர் 740 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, சென்னை, பெங்களூரு, சேலம், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 20 கிலோ எடை கொண்ட கொய்யா பழம் தரத்திற்கு ஏற்ப ஒரு பெட்டி 350 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை யானது. ஆனால் இம்மாதம் 200 முதல் 400 ரூபாய் வரை விலை போகிறது.
ஜூஸ்சிற்கு பயன்படும் கொய்யா பழம் ஒரு பெட்டி 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. பழுத்த பழங்கள் ஒரு கிலோ 10 ரூபாய் என, குறைந்த விலைக்கு விற்பனையாகிறது.
இந்நிலையில், திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கொய்யா விளைச்சல் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
இதன் காரணமாகவும், நோய் தாக்கம், உற்பத்தி செ லவு, பூச்சி மருந்து, ஆள்கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், எதிர்பார்த்த விலைக்கு கொய்யா விலை போகாததால் பண்ருட்டி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் ஒரு பெட்டி 150 ரூபாய்க்கு விற்பதை தவிர்த்து நிலத்திலேயே கொட்டி அழித்து விடுகின்றனர்.
இதுகுறித்து ஒறையூர் கொய்யா விவசாயி சிவக்குமார் கூறுகையில், 'குத்தகை எடுத்து கொய்யா சாகுபடி செய்தேன். ஒரு பெட்டி கொய்யா 150 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர்.
தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா பதப்படுத்தும் நிலையம் ஏற்பாடு செய்திருந்தால் கொய்யா பதப்படுத்தி விற்க முடியும். ஆனால், பதப்படுத்தும் நிலையம் இல்லை.
நோய் தாக்கம், உரிய விலை இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலை விஞ்ஞானிகள் கொய்யா மரங்களை ஆய்வு செய்து உரிய அறிவுரை வழங்க வேண்டும்' என்றார்.
நல்லுார்பாளையம் விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், 'பெரிய அளவில் உள்ள கொய்யா தற்போது கேரளாவிற்கு ஏற்றுமதியாகிறது. தமிழகத்தின் பிற பகுதியில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இங்கு, விலை வீழ்ச்சியாக உள்ளது. கொய்யா விவசாயத்திற்கு செலவிற்கேற்ப வருவாய் இல்லை. இதனால், விவசாயிகள் மன உளைச்சலில் உள்ளோம்' என்றார்.