/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பருத்தி கொள்முதல் நிறுத்தத்தால் விவசாயிகள் கவலை
/
பருத்தி கொள்முதல் நிறுத்தத்தால் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 19, 2025 06:39 AM
கடலுார் : காட்டுமன்னார்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் திறக்கப்பட்டது.
இங்கு, கோவை, திருப்பூர், கரூர் போன்ற வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று மறைமுக ஏலம் மூலம் விசாயிகளிடம் இருந்து நேரிடையாக பருத்தி கொளமுதல் செய்தனர். கடந்த ஆண்டு மறைமுக ஏலம் மூலம் பருத்தி பஞ்சு அதிகப்பட்ச விலையாக 75 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.
ஆனால், இந்தாண்டு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதல் திடீரென நிறுத்தப்பட் டுள்ளது.
இதனை பயன்படுத்தி உள்ளூர் தனியார் வியபாரிகள் பருத்தி பஞ்சு கிலோ 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை என, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது' என்றனர்.