ADDED : நவ 27, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜன் மனைவி ஆர்த்தி, 22; இந்த இருவருக்கும் திருமணமாகி, 6 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில், காமராஜன் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
இதன் காரணமாக கடந்த, 6 மாதங்களாக ராசாபாளையம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் ஆர்த்தி தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த, 24ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஆர்த்தி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை அழகேசன் கொடுத்த புகாரின், பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, ஆர்த்தியை தேடி வருகின்றனர்.

