UPDATED : மே 13, 2026 03:56 PM
ADDED : மே 13, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: மகள் மயமானதாக தந்தை போலீசில் புகார் அளித்தார்.
குறிஞ்சிப்பாடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகள் ஸ்ருதி, 22 ; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.எட்., படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல கல்லுாரி பஸ்சில் கல்லுாரிக்கு சென்ற ஸ்ருதி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை.
இதையடுத்து மகள் மாயமானது குறித்து முருகன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
