ADDED : ஆக 19, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கடைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மங்கலம்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி திவ்யா பிரபா, 33. இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்ய பிரபா இதுவரை வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தந்தை சங்கர் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, திவ்யா பிரபாவை தேடி வருகின்றனர்.
