ADDED : செப் 18, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில், செப். 19–
வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரைச் சேர்ந்தவர் பாலமணிகண்டன்,50; இவரது மகள் சரவணசுருதி,21; புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி., அனஸ்திஸ்யா நான்காம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர், கடந்த 15ம் தேதி வீட்டில் இரவு சாப்பிட்டு படுக்க சென்றவர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாலமணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து சரவணசுருதியை தேடிவருகின்றனர்.
