ADDED : அக் 25, 2026 02:30 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: மகளை காணவில்லை என தந்தை போலீசில், புகார் செய்துள்ளார்.கிள்ளை சிசில் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 40; இவரது, மகள் பவானி, 19; இவர்,செல்போனில் தொடர்ந்து பேசிவந்ததை மூர்த்தி கண்டித்தார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி மூர்த்தி, கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தப்போது பவானியை, காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, பவானியை, தேடிவருகின்றனர்.
