ADDED : ஆக 22, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை, பாட்டை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வினோத்குமார், 25; டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த இவர், குறிஞ்சிப்பாடி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த, 19ம் தேதி காலை வேலைக்கு சென்ற வினோத்குமார், மாலை 7:00 மணிக்கு தனது தாயிடம் மொபைல் போனில் நண்பர்களுடன் சென்னை ஏர்போர்ட் சென்று காலையில் வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.