/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டு சுவர் இடிந்து தந்தை, மகள் காயம்
/
வீட்டு சுவர் இடிந்து தந்தை, மகள் காயம்
ADDED : ஜன 08, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் முதுநகர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிகுப்பம், திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன், 60. இவரது மகள் வீரம்மாள்,35. நேற்று மதியம் இருவரும் பொங்கலை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஒருபகுதியில் சேதமடைந்த நிலையில் இருந்த மண்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் முருகையன், வீரம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.