ADDED : ஜூன் 11, 2026 08:06 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கம்மாபுரம் அடுத்த ஊ.ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் ஜெயவேல், 39; இவர் நெய்வேலி என்.எல்.சி., சுரங்கம், 1ல் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடுதிரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தந்தை ஜெயபாலன் புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெயவேலை தேடி வருகின்றனர்.
