/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தந்தை, மகன் அலப்பறை பஸ் நிலையத்தில் பரபரப்பு
/
தந்தை, மகன் அலப்பறை பஸ் நிலையத்தில் பரபரப்பு
ADDED : அக் 05, 2024 11:27 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபோதையில் தந்தையும், மகனும் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து சேத்தியாத்தோப்புக்கு நேற்று மதியம் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. அப்போது, போதையில் இருந்த இருவர், பஸ்சின் முன்புற டயருக்கு முன்பாக படுத்து ரகளையில் ஈடுபட்டனர். டிரைவர், கண்டக்டர் வெளியேறுமாறு கூறியும் அலப்பறையில் ஈடுபட்டதால் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மகன் நிர்மல் என்பதும் மதுபோதையில் இருப்பது உறுதியானது.
சேலம் செல்ல அரசு பஸ்சில் ஏறியபோது, சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அதில் இருந்த பயணி ஒருவர் தாக்கியதால், அவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
ஒரு வழியாக இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தெளிய வைத்தனர். பின்னர், இருவரும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தந்தையும் மகனும் ஒன்றாக மதுஅருந்தி விட்டு அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம், பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.