ADDED : மே 02, 2025 05:14 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் முகிலா, 24; இவர் விருத்தாசலம் கடைவீதியில் உள்ள தனியார் ஜவுளி ேஷாரூமில் பணிபுரிகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பேபி அளித்த புகரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, முகிலாவை தேடி வருகின்றனர்.
