/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க சேலைகளால் வேலி
/
காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க சேலைகளால் வேலி
ADDED : டிச 24, 2025 06:10 AM

க டலுார் மாவட்டத்தில் நெல், கரும்பு, சோளம், மணிலா, வாழை உட்பட பயிர் சாகுபடி செய்கின்றனர். விவசாய பயிர்களை நாசம் செய்யும் வன விலங்குகள் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் காட்டுப்பன்றியால் நெல், கரும்பு, சோளம், வாழை, மணிலா பயிர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. காட்டுப்பன்றி தொல்லையை தடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதனால் காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகளே சுயமாக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
அவற்றில் பழைய வண்ண சேலைகளை பயன்படுத்தி, தடுப்பு வேலி அமைத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்; காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பட்டாசு வெடித்தும், தகரங்களை கொண்டு ஒலி எழுப்பியும், தீ மூட்டியும் இரவு முழுவதும் காவலில் இருப்போம். இரவு நேரங்களில் காவல் காக்க முடியாததால் முன்னோடி விவசாயிகளின் ஆலோசனைப்படி, பழைய சேலைகளை தடுப்பு வேலிகளாக கட்டி விடுவதால் அதில் எழும் சத்தம், காற்றில் அசைவதாலும் காட்டுப்பன்றிகள் அருகில் வர அஞ்சுகின்றன.
இதனால் காட்டுப்பன்றிகளின் தொல்லை குறைந்துள்ளது. செலவும் குறைவாக உள்ளது என கூறினர்.

