/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.புதுாரில் பஸ் நிலையம் இழுபறி நிலம் வாங்கி குவித்தவர்களுக்கு 'ஜுரம்'

ADDED : நவ 13, 2024 05:34 AM
கடலுார் கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில் (குறிஞ்சிப்பாடி தொகுதி) புதிய பஸ் நிலையம் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலுாரில் இருந்து மிகவும் துாரத்தில் புதிய பஸ் நிலையம் அமைவதற்கு அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சிகள், நகர் நலச்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இப்பணியின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் கண்டிப்பாக எம்.புதுாருக்கு வந்துவிடும் என நம்பி, ஆளுங்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்கள் பஸ் நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் ஏராளமான நிலத்தை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்தமுறை நடந்த மாநகர கூட்டத்தில் இதுபற்றி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பும்போது, ஆணையர் இப்பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். இப்போது தொடக்க நிலையில்தான் உள்ளது என்றார்.
எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
அதே சமயத்தில் சட்டசபை தேர்தலும் நெருங்குவதால் பஸ் நிலையம் வருமா, வராதா என்ற நிலையில், அங்கு நிலம் வாங்கி குவித்தவர்கள், பல கோடி ரூபாய் மதி்ப்பில் வாங்கி போட்ட இடம் பயனற்று போய்விடுமோ என்ற மன நிலையில் உள்ளனர்.