ADDED : மார் 10, 2024 06:09 AM
மந்தாரக்குப்பம், : கம்மாபுரம் வட்டார சுகாதார துறை சார்பில் மேல்பாதி ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கம்மாபுரம் அருகே மேல்பாதி ஊராட்சியில் காய்ச்சல் பரவல் காரணமாக, அப்பகுதியில் குப்பைகள் அகற்றுதல், கழிவு நீர் அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை துாய்மைப்படுத்தல், நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கம்மாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜ் தலைமையில் சுகாதார ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மலேரியா, டெங்கு, காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மற் றும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
மேலும், டாக்டர் கவிதா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள், செவலியர்கள், உட்பட பலர் பங்கேற்றனர்.
