நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களில் கிராம, நகர்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின் கட்டணத்தைபேரூராட்சி, கிராம ஊராட்சிகள் நேரடியாக மின்துறைக்கு செலுத்தி வருகின்றன.
புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்கள், புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளிள் இரவு பகலாக தெரு விளக்குகள் எரிந்து வருகிறது. இதனால் மக்கள் வரி பணம் மின் கட்டணம் என்ற பெயரில் வீணடிக்கப்பட்டு வருகிறது. எனவே, அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி, தெரு விளக்குகளை பகல் நேரங்களில் அனைத்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.